கோவை, பிப். 16-
துணைவேந்தர் கணபதியிடம் மேற்கொள்ளப்பட்ட5 நாள் காவல்துறையினரின் விசாரணை முடிந்த நிலையில்மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பேராசிரியர் பணியிட நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரை கடந்த பிப்.3 தேதி கோவைலஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். பின்பு, இருவரும் கோவை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து கணபதியை 5 நாட்கள் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜான்மினோ முன்னிலையில் கடந்த பிப்.12தேதி நடந்தது. இதில் துணைவேந்தர் கணபதியை காவல்துறையினர் காவலில் வைத்து பிப்.16 தேதி மாலை 6.30 வரை விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 5 நாள் விசாரணை முடிந்ததையடுத்து துணைவேந்தர் கணபதியை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மினோ முன்னிலையில் வெள்ளியன்று மாலை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, துணைவேந்தர் கணபதியை வரும் மார்ச் 2ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து துணைவேந்தர் கணபதியை காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: