ஈரோடு, பிப்.16-
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் வியாழனன்று முதல்காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

தமிழகத்தில் வருவாய் துறையின் கீழ் பணியாற்றும் கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல், கிராம உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல் ஓய்வுபெறும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவிகிதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து வியாழக்கிழமை முதல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின்சார்பில் காத்திருக்கும் போராட்டங்கள் நடைபெற்றன.

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகவளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் புஷ்பராகு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் திரளான ஊழியர்கள் பங்கேற்றனர். இதேபோல், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டகிராம உதவியாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

சேலம்
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஆ.ராஜசேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மேட்டூர் வட்ட கிளைசெயலாளர் து.சிங்கராயன் மற்றும் எம்.அழகப்பன், எம்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.எஉ

Leave A Reply

%d bloggers like this: