வேலூர்,

வேலூரில் கந்துவட்டி கொடுமையால் கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள பாண்டியன் நகரில் வசித்து வரும் ஸ்ரீதர் என்பவர் கட்டட ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவர் கட்டுமான தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கந்துவட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டு மாடியில் ஓய்வு எடுப்பதாக கூறிச் சென்ற ஸ்ரீதர் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீதரின் உடலை மீட்ட காவலர்கள் அவர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் கந்து வட்டி கொடுமையால் தான் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: