உதகை, பிப்.16-
ஆஷா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆஷா ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி மாவட்ட ஆஷா ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) முதல் மாநாடு வியாழனன்று உதகையிலுள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சீதாலட்சுமி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் ஜே.ஆல்தொரை, எம்.ஆர்.சுரேஷ், அரசு ஊழியர் சங்கத்தின் ஏ.ஆர்.ஆஸரா, கே.சாந்தகுமாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இம்மாநாட்டில் ஆஷா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாலியல் புகார் பெட்டி வைத்திட வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு பென்சன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் 8 ஆம் தேதியன்று உதகை மற்றும் கூடலூரில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் சங்கத்தின் கௌரவ தலைவராக ஜே.ஆல்தொரை, தலைவராக சீத்தாலட்சுமி, பொதுச்செயலாளராக குணசுந்தரி, பொருளாளராக சௌதா, துணை
நிர்வாகிகளாக சுலோச்சனா, நந்தினி, சுமதி, பானு, இந்துமதி, ரீனா, பார்வதி, சாந்தி மற்றும் 33 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.