கோவை, பிப்.16-
கோவையில் அனுமதி இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும். இதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறையை மீறி கோவை நகரில் வாகனங்களில் பள்ளி குழந்தைகள் ஏற்றி செல்லப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது. இதன்பேரில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் உத்தரவின்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், சிவக்குமார், விஜயகுமார் ஆகியோர் என்.ஜி.ஜி.ஓ காலனியிலுள்ள தனியார் பள்ளி அருகே குழந்தைகளை ஏற்றி வந்த வாகனங்களை வியாழனன்று சோதனையிட்டனர். அப்போது, உரிமம் இல்லாமலும், எப்சி புதுப்பிக்காமலும் 4 வாகனங்கள் இயக்கப்பட்டது தெரியவந்தது. இந்த 4 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்பு இந்த வாகனங்கள் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: