குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, ஒரு மாதத்திற்கு முன்பே, இந்தியாவிலிருந்து தப்பிவிட்டதாக கூறப்படும் நிலையில், அவர் கடந்த கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பிரதமருடன் டாவோஸ் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றது எவ்வாறு? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக மத்திய அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், பிரதமர் மோடியுடன் நீரவ் மோடி இணைந்து எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Leave A Reply