தூத்துக்குடி:
சிபிஎம் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்டுள்ள பாடலை சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் புதனன்று வெளியிட்டார்.

வா தோழா வா தோழா. வாவா தோழா வா, நம் கைகள் உயர்த்தி வானை தீண்டிடுவோம்
வானின் வண்ணம் சிவப்பாய் மாற்றிடுவோம்…

என்று தொடங்கும் பாடல் வரிகளை வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளரும், சமூக ஊடக பொறுப்பாளருமான ஆண்டோ கால்பர்ட் எழுதியுள்ளார். இந்து, கோல்டுவின் ஆகியோரது இசைக்கோர்வையில் எழுச்சியூட்டும் இப்பாடலை ஸ்ரீராம் பாடியுள்ளார்.
பாடல் வெளியீட்டின்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பி.பெருமாள், பேச்சிமுத்து, ஊடக ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.