புதுதில்லி:
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களின் சம்பளம் ரூ. 90 ஆயிரத்தில் இருந்து ரூ. இரண்டரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பளம், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது தேர்தல் ஆணையர்களின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெறத் தகுதி பெற்றவர்கள் என்று தேர்தல் ஆணையர்கள் பணி விதிமுறைகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில், இந்த உயர்வு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மாதம் ரூ. 2.5 லட்சம் என்ற இந்த சம்பள உயர்வானது, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.