புதுதில்லி:
மொரீஷியஸ் நாட்டின் 50-ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.மார்ச் மாதம் இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல ராம்நாத் கோவிந்த் திட்டமிட்டுள்ளார். அப்போது, மார்ச் 12-ஆம் தேதி மொரீஷியஸ் நாட்டின் 50-வது சுதந்திர தினத்தில் அவர் பங்கேற்கிறார்.
அதனை அடுத்து, மடாகஸ்கர் நாட்டுக்கும் கோவிந்த் செல்கிறார்.குடியரசுத் தலைவருடன் உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலரும் செல்வார்கள் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.