மும்பை,
மும்பையில் அந்தோரி பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் அந்தேரி பகுதியில் மிட்டல் எஸ்டேட் என்ற கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.   தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றன. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  இந்த தீ விபத்தில் ஒருவர் சிக்கி காயமடைந்திருந்தார்.  அவர் பிரதீப் விஸ்வர்மா (வயது 30) என அடையாளம் காணப்பட்டு உள்ளது.  இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபாமாக உயிரிழந்தார்.

Leave A Reply