புதுதில்லி:
கடந்த ஆண்டில், சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ பொருட்கள் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

இதில், ‘பதஞ்சலி’ விளம்பரத்துக்கு மட்டும், ரூ. 570 கோடியை சாமியார் ராம்தேவ் அள்ளி வீசியிருப்பதும் செலவிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.நாடு முழுவதும் ‘பதஞ்சலி’ யோகா மையங்கள் நடத்தி வரும் யோகா சாமியார் ராம்தேவ் சில வருடங்களுக்கு முன் ‘பதஞ்சலி’ என்ற பிராண்டட் மூலம நுகர்பொருள் தயாரிப்பில் இறங்கினார்.இதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மிகப்பெரிய ஆய்வுக்கூடம் நிறுவினார். இங்கு உணவுப் பொருட்கள், நுகர் பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆயுர்வேத மருந்துகள் என மக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பினார்.

மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கின் மூலம், நாட்டின் முக்கிய நகரங்களில் பதஞ்சலி விற்பனை நிலையங்களை அமைத்தார். ஏற்கெனவே, சந்தையில் இருக்கும் கம்பெனிகளையும் ஓரங்கட்டினார். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ‘பதஞ்சலி’ பொருட்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.

பதஞ்சலி பொருட்கள் தரமற்றவை என்று இந்திய தரச்சான்று அளிக்கும் அமைப்புக்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் பலமுறை அறிவித்தும், பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம், தங்குதடையின்றி தனது கடைகளை விரிவுபடுத்தினார்.

இதன்மூலம், கடந்த 2016-17ஆம் ஆண்டில் ‘பதஞ்சலி’ பொருட்கள் மூலம் சாமியார் ராம்தேவ் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு கல்லா கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதனை பதஞ்சலி செய்தி தொடர்பாளர் எஸ்.கே. திஜரவாலாவே, அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதில், விளம்பரத்துக்கு மட்டும் பதஞ்சலி நிறுவனம் ரூ. 570 கோடி செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: