பாட்டி வேடத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த மூத்த நடிகை ரங்கம்மாள் கடும் பொருளாதார நெருக்கடியால் மெரினா கடற்கரையில் பிச்சையெடுப்பதாக ஒரு செய்தி பரவியது. இதனைக் கேள்விப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் இந்தச் செய்தி உண்மையா என அறிந்துவர உடனடியாக சில பொறுப்பாளர்களை அனுப்பிவைத்தது. மெரினா கடற்கரையில் அந்த நடிகை சின்னச் சின்னப் பொருட்களை விற்றுக்கொண்டிருப்பதை அவர்கள் பார்த்து தகவல் தந்தனர். இதனையடுத்து, ரங்கம்மாளுக்கு நடிகர் சங்கம் சார்பில் நிதி உதவியாக 5 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டது. அவர் துணை நடிகர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும், மனிதாபிமான அடிப்படையிலேயே இந்த உதவியை வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். திரைத்துறையில் வெறும் 500 ரூபாய்கூட சம்பாதிக்க இயலாத வயது முதிர்ந்த அந்த நடிகைக்கு இன்னும் கூடுதலாக எந்த வகையில் உதவலாம் என்று யோசித்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல கமலுடன் நடனக் குழுவில் ஆடிய முன்னாள் நடிகை பிந்துகோஷ் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவரது வறுமையையும் கருத்தில்கொண்டு அவருக்கும் நடிகர் சங்கம் கடந்த வாரம் பண உதவி செய்துள்ளது.
இதுவெல்லாம் சங்கமாகச் சேர்ந்ததால் வந்த நன்மை

Leave A Reply

%d bloggers like this: