புதுதில்லி,
புதுதில்லியில் கடும் பனியால் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

தலைநகர் தில்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது. இந்நிலையில்  இன்று 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  11 ரயில்கள் தாமதமாக வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதே காரணங்களுக்காக ரயில் ஒன்றின் நேரம் திருத்தப்பட்டு உள்ளது.  இதனால் பயணிகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகினர்.  அதேவேளையில், நகர் முழுவதும் பனியின் தாக்கம் சிறிதளவு குறைந்துள்ளதும் உணரப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: