திருப்பூர், பிப்.15-
திருப்பூர் நியாய விலைக் கடையில் வாங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் புதனன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி 48 ஆவது வார்டு சூசையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமேரி. இவர் செவ்வாயன்று அப்பகுதியில் உள்ள கே-294 எண் கொண்ட நியாய விலைக் கடையில், வளர்மதி பண்டக சாலையில் இருந்து விற்பனைக்கு வரும் 25 கிலோ அரிசியை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதன்பின் அதனை சமைத்து பார்த்தபோது அரிசியில் பிளாஸ்டிக் கலந்திருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நியாய விலைக்கடையில் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: