குமாரபாளையம், பிப்.15-
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவிகிதம் கூலி உயர்வு வழங்கிடக்கோரி குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவிகிதம் கூலி உயர்வு வழங்கிட வேண்டும். குமாரபாளையம் பகுதியில் போனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இரவு நேர வேலை செய்யும் விசைத்தறி தொழிலாளிகளுக்கு உணவு கட்டணம் கொடுக்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்தி 8 மணி நேர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் என்.வேலுசாமி, சம்மேள உதவி தலைவர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் எம்.அசோகன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கே.மோகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: