சென்னை:
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் அயன்புரத்தில் செவ்வாயன்று (பிப்.13) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், அதிமுக வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது. ஊழல் வழக்கில்
ஜெயலலிதா குற்றவாளி என்று தனது தீர்ப்பில் நீதிபதி குன்ஹா ஊர்ஜிதம் செய்தார். தீர்ப்போடு நிற்காமல்  ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக் களையும் பறிமுதல் செய்து அரசே ஏற்கவேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியது. மறைந்துவிட்ட தால் கன்னியமிக்க சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கப்படுவதை ஏற்கமுடியுமா? அவசரக்கோலத்தில் அம்மா படத்தை திறப்பதா என டி.டி.வி தினகரன் அறிக்கைவிடுகிறார். ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியை கமிஷன் மண்டி என்று இவர் கூறுகிறார். இவர்களைப் பார்த்தால் “யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை’’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியா பெங்களூரு சிறைக்கு சசிகலா சென்றுள்ளார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுதந்தி
ரப்போராட்டத்தில் பங்கேற்ற எங்கள் தோழர் சங்கரய்யா 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவர் நாட்டிற்காகப் போராடி சிறைக்குச் சென்றார். அதுதியாகம்.
ஓபிஎஸ்-இபிஎஸ், சசிகலா இவர்கள் யாரும் புனிதரல்ல.ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அதிமுக அரசு சுயமாக சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. தில்லி
யிலிருந்து ஆட்டுவிக்கப்படுகின்றனர். கூத்தாடும் குரங்கின் கயிறு கூத்தாடி
யின் கையில் இருப்பது போல் இவர்களை மோடி ஆட்டுவிக்கிறார்.
பிப் 12 தமிழக சட்டமன்ற வரலாற்றின் கருப்பு நாள் . சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைத்து சட்டமன்ற மாண்பை சீரழித்துவிட்டனர். இது காழ்ப்புணர்ச்சியால் சொல்லுவதல்ல, திருவள்ளுவர், மகாத்மாகாந்தி, மூதறிஞர் ராஜாஜி,கன்னியமிக்க காயிதே மில்லத், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், கருர் வீரர்காமராஜர், அறிஞர் அண்ணா, சட்டமேதை
டாக்டர் அம்பேத்கர் படவரிசையில் சொத்துகுவிப்பு வழக்கில் ஊழல்குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா படம் வைத்திருப்பதை ஏற்கமுடியாது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 10லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகிவிட்டது. 15 டிஎம்சி தண்ணீர்  கிடைத்தால் கூட விவசாயிகளும் விவசாய நிலமும் பாதுகாக்கப்படும். விவ
சாயிகள், மாணவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடி வருகிறார்கள். அவர்கள் குறித்து அக்கறையற்ற அதிமுக அரசு நம்மை ஆளும் தகுதியை இழந்து விட்டது.
தமிழகத்திற்குத் தண்ணீர் தருவதற்கு காவிரிமேலாண்மை வாரி
யத்திற்கு அதிகாரம் இல்லை என பாஜக உச்சநீதிமன்றத்தில் வாதிடு
வதை என்ன சொல்வது. மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்ப
டும் அதிமுக கீழடியை மூடுவதற்கும், உதய் மின்திட்டத்திற்கும், நீட்தேர்வுக்கும், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கும் பச்சைக்கொடி காட்டு வது சரியா, நீட் தேர்வை ரத்து செய்தால் குடியரசுத் தேர்தலில் வாக்களிப்போம் என மத்தியரசை அதிமுக நிர்ப்பந்தித்திருக்கலாம். மக்கள் நலனின் அக்கறையில்லாமல் ஆட்சியையும், அதிகாரத்தையும் பங்கு போடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர்.தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயி
கள், பொதுமக்கள் மீது யுத்தம் தொடுத்துள்ள மத்திய மாநில அரசுகளை அப்புறப்படுத்த
வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
திமுக சென்னை கிழக்கு மாவட் டம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக பகுதிச்செயலாளர் வே.வாசு தலைமை தாங்கினார். பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், ப.தாயகம் கவி, கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி ஆனந்தன் (காங்கிரஸ்), சி.மகேந்திரன் (சிபிஐ), ஆவடி இரா.அந்திரிதாஸ் (மதிமுக), எம்.அப்துல் ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லிம்லீக்), முகமது யூசப் (விசிக), எஸ்.ஹைதர்அலி (மனிதநேய மக்கள் கட்சி), எல்.சுந்தரராஜன் (சிபிஎம்)
உள்ளிட்ட பலர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.