திருப்பூர், பிப். 15-
திருப்பூர் தொழில்துறையினர் உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில் துவங்க வருமாறு அம்மாநில அரசு அதிகாரிகள் புதனன்று சைமா அலுவலகத்திற்கு நேரில் வந்து அழைப்பு விடுத்தனர்.

உத்தரபிரதேச மாநில முதல்வரின் தலைமை செயலாளர் மிருத்யன் ஜய் குமார் நாராயண், ஜவுளி துறை துணை ஆணையர் சுனில் யாதவ் ஆகியோர் கொண்ட குழுவினர் புதனன்று திருப்பூர் சைமா அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களை சைமா தலைவர் ஈஸ்வரன், பொது செயலாளார் பொன்னுசாமி, மற்றும் தொழில் துறையினர் வரவேற்றனர். பின்னர் உத்தரபிரதேச மாநில ஜவுளி கொள்கையை சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில் துவங்க வருமாறும், அவர்களுக்கு அம்மாநில அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். இதில் ஏராளமான தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: