அத்தனைக்கும் ஆசைப்பட சொன்ன ஜக்கி வாசுதேவ், முதலில் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி கல்லா கட்ட ஆசைப்பட்டார். அத்தோடு ஆசை அடங்கவில்லை. தற்போது கடவுள் நம்பிக்கையாளர்களை ஒன்று திரட்டி இந்துத்துவா மதவெறியர்களின் கைக்கூலிகளாக மாற்றவும் ஆசைப்படுகிறார்.

ஏற்பாடுகளில் ஒன்றாக மகாசிவராத்திரியை பயன்படுத்துகிறார் என்ற புகார் எழுந்திருக்கிறது.மகாசிவராத்திரி என்பது தமிழகத்தில் பெரும் பகுதி மக்கள் தங்களின் குல தெய்வவழிபாட்டிற்கான நாளாகவே உள்ளது. அத்தகைய பக்தர்களை பெருதெய்வ வழிபாட்டை நோக்கி இழுத்துச் செல்லுவதன் மூலமே பரந்துபட்ட மக்களை மிக எளிதாக மதவெறி வலைக்குள் சிக்க வைக்க முடியும்.

அதோடு தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவகுப்பினரின் தெய்வ நம்பிக்கை மற்றும் பன்மை பண்பாட்டுக்கும் முடிவு கட்டிட முடியும்.அதாவது மாரியாத்தா, காளியாத்தா, அய்யனார்,பாண்டி போன்ற எல்லை சாமிகளையும் பின்னுக்கு தள்ளி; அதன் மூலம் ஒற்றை பண்பாடுஎன்பதை நோக்கி இந்து மக்களை நகர்த்த முடியும் என்பது சங்பரிவாரின் சதி திட்டம். அதன்செயல்திட்டமாகவே ஜக்கியின் மகாசிவராத்திரி.வெளித்தோற்றத்தில் ஜக்கி ஏதோ இலவசமாக எல்லாவற்றையும் நடத்துவது போன்ற தோற்றம் கார்ப்பரேட் ஊடகங்களால் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் இதில் பங்கேற்பதால் மகாசிவராத்திரியின் ஒட்டுமொத்த புண்ணியமும் கிடைக்கும் என நம்பவைக்கப்படுகிறது. “ஆதியோகி சிலை முன்பு வந்து மகாசிவராத்திரியன்று விழித்திருந்தால், 365 நாட்களும் யோகா பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சமமான பலன், அந்த ஒரே நாளில் கிடைத்து விடும்’’ என ஜக்கி அருளுரை வழங்குகிறார்.

ஆனால் மகாசிவராத்திரியில் பங்கேற்ககுறைந்த கட்டணமே ரூ. 500. ஆதியோகி சிலைஅருகே செல்லச் செல்ல கட்டணமும் கூடிக்கொண்டேஇருக்கும். சிலை முன்பு, ஜக்கியின் பின் பகுதியில் உட்கார வேண்டும் என்றால் கட்டணம் ரூ. 2 லட்சம் வரை. ஒரு லட்சம் பேர் குறைந்த கட்டணம் ரூ. 500 செலுத்தியுள்ளனர் என்று வைத்துக்கொண்டாலும் ரூ. 5 கோடி. மோடி வந்த போது,சுண்டல், பொங்கல் , சாதம் என வெரைட்டியாக கொடுத்த அன்னதானம். தற்போது சாம்பார்சாதத்துடன் சுருங்கி விட்டது என பக்தர்கள் ஒரு புறம் புலம்புகின்றனர்.

அந்தத் திடலில்மொத்தம் 600 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த கடைகளுக்கும் ஒரே வாடகையல்ல, ரூ. 8ஆயிரம் துவங்கி ரூ.1 லட்சம் வரை. இதில்சாதாரண பகுதி, விஐபி பகுதி என கல்லா கட்டியது தனிக்கதை. ஆனால் கடை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிக்கு ஒரு நயா பைசா கிடையாது. இதுவெல்லாம் வெளியேவந்து விடக்கூடாது என்பதால் ஆனந்த விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டது.

இதிலும் ஆர்எஸ்எஸ், விஎச்பி, பிஜேபி, இந்து முன்னணி ஆதரவு பெற்றோருக்கே முன்னுரிமையாம். இந்த கடைகளிலும் அசைவத்திற்கு தடை.எனவே ஜக்கியின் மகாசிவராத்திரி என்பது நம் கையை கொண்டு நம் கண்ணையே குத்தச் செய்யும் சங்பரிவாரின் சூழ்ச்சியாகும். இதற்கு தமிழகத்தில் இருக்கும் மோடியின் பினாமி அரசு எடுபிடியாக இருப்பதுதான் வேதனை.

Leave A Reply

%d bloggers like this: