நியூயார்க்,
அமெரிக்கா பள்ளியில் இளைஞர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புளோரிடா மகாணத்தம் பார்க்லாந்தில் உள்ள ஸ்டோனெமன் டக்ளஸ் உயர்நிலை உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த நிகோலஸ் குரூஸ் (வயது 19) அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர்.  மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பள்ளியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்பு மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாதுகாப்பதாக வெளியேற்றினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும், ஒழுக்கமின்மை காரணமாக பள்ளி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.