குமாரபாளையம், பிப். 15-
குப்பண்டபாளையம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் குப்பண்டபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூலங்காடு பகுதியில் குடிநீர், சாலை, சாக்கடை, கழிவறை வசதிகளை முறையாக ஏற்படுத்தி தரவேண்டும். குப்பண்டப்பாளையம் பகுதி சுடுகாட்டிற்கு எரிமேடை கட்டித்தர வேண்டும். வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். கோட்டமேடு புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் எனக்கோரி வியாழனன்று குமாரபாளையம் வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தனபால், நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.முருகேசன், நகர குழு உறுப்பினர் ஜி.மோகன் அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: