புதுதில்லி:
நாட்டின் முப்படைகளுக்கும் 7 லட்சத்து 40 ஆயிரம் துப்பாக்கிகளை வாங்க ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமையன்று நடைப்பெற்றது. இதில், முப்படைகளின் பயன்பாட்டுக்காக ரூ. 12 ஆயிரத்து 280 கோடி மதிப்பில் 7 லட்சத்து 40 ஆயிரம் நவீன ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் ரூ. 1,819 கோடியில் இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் வாங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், ராணுவத்துக்காக ரூ. 982 கோடி மதிப்பில் 5,719 ‘ஸ்னீபர்’ ரக துப்பாக்கிகள் வாங்குவது தொடர்பான பரிந்துரையும் இந்த கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.