டெஸ்ட் போட்டிகளில் முத்திரை பதித்த தென்னப்பிரிக்க அணியை ஒருநாள் தொடரில் இந்திய அணி பந்தாடியது.குறிப்பாக குல்தீப் யாதவ்-சஹால் கூட்டணியின் மாயாஜால சுழலை கண்டாலே தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் நடுங்குகின்றனர்.அந்தளவுக்கு அணியை இந்த சுழல் ஜோடி மிரட்டி வருகிறது. தென்னப்பிரிக்கா மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை கைப்பற்ற குல்தீப் யாதவ்-சஹால் ஜோடி முக்கிய காரணமாக திகழ்கிறார்கள்.இதுவரை நடைபெற்ற 5 ஒருநாள் போட்டியில் இந்த ஜோடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.குல்தீப் யாதவ் 16 விக்கெட்டும்,சஹால் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து ஜோடி என்ற பெருமையை இருவரும் பெற்றனர்.இதற்கு முன்பு 2006-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய சுழற்பந்து வீரர்கள் 27 விக்கெட் (6 போட்டி) வீழ்த்தி இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.