வால்பாறை, பிப்.14-
வால்பாறையில் சிறுவனை கொன்ற சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

வால்பாறை நடுமலை தேயிலை எஸ்டேட் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு முஷரப் அலி என்பவரின் மகன் சைதுல் (4) என்ற சிறுவனை சிறுத்தை அடித்துக் கொன்றது. இதையடுத்து சிறுத்தையினை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி அப்பகுதி துமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்தொடர்ந்து நடுமலை தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இந்நிலையில் சிறுத்தை புதனன்று அதிகாலையில் வனத்துறையினரால் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. பிடிபட்ட சிறுத்தையினை வரகளையாறு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: