திரிபோலி,

லிபியாவில் சுமார் 300 பேரை ஏற்றி சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகினர்.

லிபியாவில் சுமார் 300 பேரை ஏற்றி சென்ற டிரக் ஒன்று லிபியாவின் பனி வாலித் நகரின் அருகே சென்று கொண்டிருந்த போது, நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சுமார் 100 பேர் காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  டிரக்கில் பயணம் செய்த பெரும்பாலோர் எரிட்ரியன் மற்றும் சோமாலியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave A Reply

%d bloggers like this: