திருப்பூர், பிப்.14-
திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10 சவரன் நகைகளை பறித்து சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மங்கலம் ரோடு ஏபிடி காலனியை சேர்ந்த அருக்காணியம்மாள் (65). தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று காலை இவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அருக்காணியம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்றார். இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல்துறையினருக்கு அவர் புகார் அளித்தார். இதுதொடர்பாக கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து நந்தகுமார் என்பவரை செவ்வாயன்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply