பண்டா:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், மணல் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வின் உறவினர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.உத்தரப்பிரதேசத்தில் மணல் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து கர்தல் சாலை என்ற இடத்தில், பணப் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நாராயணி தொகுதியின் எம்.எல்.ஏ. ராஜ்கரண் கபீரின் உறவினர் என தெரிய வந்துள்ளது. மேலும் எம்எல்ஏ-வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த எம்.எல்.ஏ. ராஜ்கரண், இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பளர் ஷாலினி மீது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.“எனக்கு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை எஸ்.பி. ஷாலினி இலக்காக வைத்து செயல்படுகிறார்; அண்மையில் எனது பிரதிநிதியான நந்த் கிஷோர் பிரம்மசாரி மீதும் எஸ்.பி. ஷாலினி போலி வழக்கு ஒன்றை பதிவு செய்தார்; தற்போது எனது உறவினரையே அவர் கைது செய்துள்ளார்” என்று கொதித்துள்ளார்.உத்தரப்பிரதேச முதல்வர் ‘சாமியார்’ ஆதித்யநாத்திடம் இவ்விஷயத்தைக் கூறி, எஸ்.பி. ஷாலினி மீது நடவடிக்கை எடுக்க வைப்பேன்” என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.