ஈரோடு, பிப்.14-
பேருந்து கட்டணம் உயர்வை கண்டித்து கோவை மற்றும் ஈரோட்டில் அனைத்து கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் பி.பி.அக்ரஹாரப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.துரைராஜ், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மதுரபீக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவை:
கோவை மாவட்டம், ராஜவீதியில் நடைபெற்ற கண்டனபொதுக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், மதிமுக, விசி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.