இஸ்லாமாபாத்,

பலூசிஸ்தானில் துணை ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் பலியாகினர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் இன்று துணை ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 துணை ராணுவ வீரர்கள் பலியானதாக குவெட்டா நகர காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: