தில்லி,

இந்தியாவில் நடந்த 5 குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தீவிரவாதி அரிஷ் கான் என்பவரை தில்லி காவலர்கள் புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட அரிஷ் கான் (எ) ஜுனைத், இந்தியாவில் நடந்த ஐந்துக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர் என்று கூறப்பட்டது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இவரை காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு தில்லியில் உள்ள ஜாமியா நகரில் இவர் பதுங்கியிருந்ததாக கிடைந்த தகவலை அடுத்து காவலர்கள் நடத்திய என்கவுண்டரில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளும், மோகன் சந்த் சர்மா என்ற காவல் ஆய்வாளரும் உயிரிழந்தனர். இருவர் கைது செய்யப்பட்டனர். அரிஷ் கான் தப்பியோடினார். இந்நிலையில், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த அரிஷ் கானை புதன்கிழமை காலை தில்லி காவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: