நெல்லை,

நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பியோடிய நிலையில் 4 சிறுவர்கள் பிடிபட்டனர்.

நெல்லை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வார்டன் சண்முக ராஜனை இருப்பு கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மேலப்பாளையம் காவலர்கள், சிறுவர்களை தேடி வந்த நிலையில் கோவில்பட்டி, வண்ணார்பேட்டை ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்தனர். கோவில்பட்டியில் பிடிபட்ட சிறுவன், காவலர்கள் பிடிக்க வருவதை அறிந்து தன்னைத் தானே கத்தியால் வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றான். காவலர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 8 சிறுவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.

Leave A Reply