திருப்பூர், பிப். 14-
நிலுவை ஊதியம் வழங்கக்கோரி திருப்பூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிப்பிரிவை காரணம் காட்டி ஏ+பி பிரிவு ஓய்வூதியர்களுக்கு போனஸ் மறுப்பதை கைவிட்டு உடனடியாக அனைவருக்கும் போனஸ் வழங்கிட வேண்டும். நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரிந்த ஓய்வூதியர்களுக்கு உடனடியாக திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடவேண்டும். நிலுவையிலுள்ள 21 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்த நிலுவைத் தொகையினை அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் புதன்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் க.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கததின் முன்னால் மாநில செயலாளர் அ. நிசார் அகமது, மாவட்ட துணை தலைவர் பி.மாயன்குட்டி, மாவட்ட இணை செயலாளர்கள் பி. மகுடேஸ்வரன், எஸ். நடராசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: