போர்ட் எலிசபெத்:
இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று வகையான போட்டிகளில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.6 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் டர்பன்,செஞ்சூரியன்,கேப்டவுன் ஆகிய இடங்களில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது.ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காரணமாக டக் வொர்த் லூயிஸ் விதிப்படி தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் உள்ள புனித ஜார்ஜ் பார்க் மைதானத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவின் அபார சதத்தின் உதவியால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன் எடுத்தது.தென்னாப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நெகிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி குல்தீப் யாதவின் சுழலை சமாளிக்க முடியாமல் 42.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.தென்னாப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஹாசிம் அம்லா 71 ரன்கள் எடுத்தார்.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரை முதல் முறையாக வென்று புதிய வரலாறு படைத்தது.

Leave A Reply

%d bloggers like this: