லக்னோ,
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

யோகி ஆத்தித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான தாஜ்மஹாலை மையமாக வைத்து தொடர்ந்து பாஜகவினர் பல சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலை பார்ப்பதற்கு 40 ரூபாயாக இருந்த நுழைவுக்கட்டணம் ரூ50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை மசூதியை பார்ப்பதற்கென்று தனியாக கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இனிமேல் மசூதியை காண ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். ஆனால் கட்டண உயர்வுக்கு இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: