நாமக்கல், பிப்.14-
செவிலியர் மணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த மணிமாலா சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரின் மரணத்திற்கு காரணமான மருத்துவ அலுவலர் தமயந்தி மற்றும் உதவி மருத்துவ அலுவலர் சக்தி அகிலாண்டேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தங்கப்பிள்ளை, செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply