திருப்பூர்,

திருப்பூரில் செவிலியர் மணிமாலா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த மணிமாலா சனிக்கிழமை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தலைமை மருத்துவர்கள் இடையே உள்ள பிரச்சனையின் காரணமாக அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது வேறு காரணமா ? என்ற கோணத்தில் வெள்ளிக்கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணிமாலாவின் உறவினர்கள், மணிமாலா கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தமயந்தி மற்றும் சக்தி அகிலாண்டேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மருத்துவ நல பணிகள் இணை இயக்குநர் ஜெயந்தி முதல் கட்ட விசாரணை மேற்கொண்டார். மேலும் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய விடுதியில் மணிமாலா உடன் தங்கியிருந்த செவிலியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு  காவல்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் மருத்துவர் தமயந்தி சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், மற்றொரு மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி திண்டுக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: