நாமக்கல், பிப்.14-
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே பெரும்பாளிபட்டியை சேர்ந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இன்றி காய்ந்து விட்டது. இதனால் குடிநீர் விநியோகம் இன்றி குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே, புது ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.