மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதற்கட்டமான ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு நடைபெறும். ஓராண்டு பணி நிறைவுக்கு பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் பணியின் தரத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். 3 ஆண்டுகள் நிறைவு பெறும் பட்சத்தில் வங்கியின் உதவி மேலாளர் பணிக்கு தகுதி பெறுவார்.
பணி: நிர்வாக அதிகாரி
காலியிடங்கள்: 760
வயதுவரம்பு: 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: நிர்வாகிப் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவோர் முதலில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். அப்போது முதல் ஆண்டு தொகுப்பூதியமாக மாதம் ரூ.17,000, 2-ம் ஆண்டில் மாதம் ரூ.18,500, 3-ம் ஆண்டில் மாதம் ரூ.20,000 வழங்கப்படும். 3 ஆண்டுகள் முடிவடைந்ததும் அவர்கள் உதவி மேலாளராக (கிரேடு-ஏ) பணியமர்த்தப்படுவர். அப்போதிருந்து அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 90 நிமிட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2018
ஆன்லைன் எழுத்துத்தேர்வு வரும் ஏப்ரல் 28-இல் நடபெறலாம் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதியான தேதி பின்னர் அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbi.com/pdf/careers/FinalDetailedAdvertisementforpostofExecutive201805022018.pdf என்ற அதிகாரப்பூர்வ ஆன்லைன் அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.