வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் கோலி கூறியதாவது,”தொடரை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.கூட்டு முயற்சியால் புதிய வரலாறு படைத்து இருக்கிறோம்.3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம்.
ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வெல்ல விரும்புகிறோம்.வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம்.கடைசி ஒருநாள் போட்டியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விவாதித்து வருகிறோம். ஆனால் வெற்றிக்கே முன்னுரிமை என்பதால் போட்டி தொடங்கும் முன் இறுதி முடிவு எடுக்கப்படும்” என கோலி கூறினார்.
கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 16-ஆம் தேதி (வெள்ளியன்று) செஞ்சூரியனில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.