பள்ளிப்பாளையம், பிப்.14-
பள்ளிப்பாளையத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தினை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதி ஆலம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 11 ஆவது வார்டு, வ.உ.சி நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விசைத்தறி சார்ந்த கூலி தொழில்களில் இப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியிலுள்ள மின் கம்பம் ஒன்று கிழே சரிந்து விழும் நிலையில் உள்ளது. சுமார் 11 க்கும் மேற்பட்ட இணைப்புகள் ஒரே கம்பத்தில் உள்ள நிலையில் விசைத்தறிகளை இயக்குவதற்கு அதிவேக மின் இணைப்பும் இந்த மின்ககம்பத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மின்கம்பத்தின் அருகில் கழிவுநீர் சாக்கடை செல்வதால் மின்கம்பம் இடிந்து விழும்பட்சத்தில் பெரும் உயிர்சேதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தினை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.