பியாங்சாங்:
23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த குளிர்கால ஒலிம்பிக் தொடரில் கனடாவை சேர்ந்த மார்க் மெக்மோரிஸ் என்ற பனிசறுக்கு சாகச பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.மார்க் மெக்மோரிஸ் கடந்த மார்ச் மாதம் உள்ளூரில் நடைபெற்ற பனி சறுக்கு போட்டியில் கலந்து கொண்ட போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் மார்க் மெக்மோரிஸுக்கு உடலில் பல இடங்களில் 17 எலும்புகள் முறிந்தன.நடப்பது மிகவும் சிரமம் என மருத்துவர்கள் அறிக்கை கொடுத்து ஓய்வு எடுக்க அறுவுறுத்தினர்.

இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை கருத்தில் கொண்டு தன் உடலை வறுத்தி கடினமான பயிற்சியுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி பியாங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார்.

மார்க் மெக்மோரிஸின் விடா முயற்சியின் பலனாக பனி சறுக்கு சாகச பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.மார்க் மெக்மோரிஸின் விடா முயற்சியை ஒலிம்பிக் குழு பாராட்டியுள்ளது.

Leave A Reply