திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மூன்றாமாண்டு வரலாறு பயிலும் மாணவர் எம்.செந்தில்வேல்குமார்.கிரிக்கெட் வீரரான செந்தில்குமார் இடதுகையைப் பின்னால் கட்டிக்கொண்டு வலதுகையால் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 10 மணிநேரம் தொடர்ந்து பந்துவீசி உலக சாதனை படைத்தார்.கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை பந்துவீச்சில் தொடர்ந்து 5 ஒவர்கள் வீசினாலே தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை கையை ஓடித்தது போல வலிக்கும்.ஆனால் ஒரு கையை கட்டிக்கொண்டு 10 மணிநேரம் பந்துவீசுவது எளிதான காரியம் இல்லை.
இந்த அரிய சாதனையை வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரிகார்ட் அமைப்பு உலக சாதனையாகப் பதிவுசெய்து சான்றிதழ் வழங்கியது.

விழாவை கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கல்லூரித் தாளாளர் பத்ஹுர் ரப்பானி நிகழ்வில் கலந்துகொண்டு மாணவரை வாழ்த்தினார்.கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மீரான் முகைதீன் மற்றும் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசேன் ஆகியோர் கிரிக்கெட் பந்தை மாணவர் செந்தில் வேல் குமாருக்கு தந்து உலக சாதனை நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.இந்நிகழ்வை உலகசாதனையாக பதிவுசெய்ய வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரிகார்ட் அமைப்பின் தலைவர் ஆ. கலைவாணி மற்றும் இணைச் செயலாளர் சீனி மீரான், செயலாளர் தஹ்மிதா பானு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரிகார்ட் அமைப்பை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: