மெல்போர்ன்:
முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான ஆலன் பார்டர் பெயரில் சிறப்பாக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு  விருது வழங்கி சிறப்பிக்கப்படுவது வழக்கம்.
இதற்கான அணைத்து ஏற்பாடுகளையும் கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் செய்து வருகிறது.இந்நிலையில் 2017-ஆம் ஆண்டுக்கான ஆலன் பார்டர் விருது வழங்கும் விழா மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் வென்றார்.

ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை அதிரடி வீரர் டேவிட் வார்னரும், சிறந்த டி-20 வீரராக ஆரோன் பிஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை எலிசே பெர்ரி வென்றார்.

Leave A Reply

%d bloggers like this: