இரு பிரிவினருக்கிடையே வன்முறை தூண்டும் வகையில் இயக்குநர் பாரதிராஜா பேசியது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஜனவரி 18ஆம் தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இந்து மத கடவுளா விநாயகர்? இறக்குமதி கடவுள் என விமர்சித்தும், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையெடுக்கவும் தயங்க மாட்டோம் எனவும் பேசியுள்ளார்.

இது இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இதுதொடர்பாக விசாரணை நடத்தி அந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: