சேலம், பிப். 13-
ரயில்வே துறையில் உள்ளகாலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

ரயில்வே துறையில் தனியார்மயத்தை புகுத்தக்கூடாது. இத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் நியமிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா தலைமை வகித்தார். சேலம் மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், திருப்பூர் மாவட்ட செயலாளர் எஸ்.மணிகண்டன், ஈரோடு மாவட்ட செயலாளர் எ.சகாதேவன், தர்மபுரி மாவட்டசெயலாளர் ஆர்.எழிலரசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, வாலிபர் சங்கத்தினரின் போராட்டத்தை அறிந்த சேலம் மாநகர காவல் துறையினர் துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் ரயில் நிலையம் முன்பு சுமார் முன்னூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து மோடி அரசை கண்டிக்கும் வகையில் பொதுமக்களுக்கு பக்கோடா வழங்கி ரயில் மறியல் போராட்ட அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் எம்.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டதலைவர் ஆர்.ரவிக்குமார், செயலாளர் இ.கோவிந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஆர்.லெனின், ஒன்றிய துணை தலைவர் வி.மணிகண்டன், விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.