நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜான் ஜேக்கப் உடல் நலக்குறைவால் காலமானார்.

2011 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜான் ஜேக்கப். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமையன்று ஜான் ஜேக்கப் உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: