புதுதில்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியின் போது, ஸ்வீடன் நாட்டிடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக போபர்ஸ் நிறுவனத்திடம் 1986-ஆம் ஆண்டு, மார்ச்-24-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது.ரூ. 1437 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ரூ. 64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இவ்வழக்கில் ராஜீவ் காந்தி, பட்நாகர், சத்தா ஆகியோர் மரணம் அடைந்துவிட்ட நிலையில், இந்துஜா சகோதரர்களும் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து பாஜக பிரமுகர் ஒருவர் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து நீதிபதி ஏ.எம். கன்வில்கர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: