ஈரோடு, பிப்.13-
பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என போக்குவரத்து ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) ஈரோடு மண்டல 30 ஆவது மாவட்ட மாநாடு மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் குடும்ப விழா கோபில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட துணை தலைவர் என்.முருகையா தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை எம்.ரவிக்குமார் ஏற்றி வைத்தார். இதில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன், சம்மேளன உதவித்தலைவர் ப.காளியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், சிஐடியு மாவட்ட தலைவர் ரகுராமன், செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க பொதுச்செயலாளர் ஜான்சன் கென்னடி, பொருளாளர் கே.சிவசுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்து பேசினர்.

தீர்மானங்கள்- புதிய நிர்வாகிகள் தேர்வு:
போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். கரும்பு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இம்மாநாட்டில் சங்கத்தின் ஈரோடு மண்டல தலைவராக கே.மாரப்பன், பொதுச்செயலாளராக டி.ஜான்சன் கென்னடி, பொருளாளராக கி.பழனிசாமி உட்பட 17 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. முடிவில், சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநாயினார் நிறைவுரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.