பணித்தளத்தை பகிர்ந்து கொள்ளும் முறை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இதனால் முதல்தலைமுறை தொழில்முனைவோர் ஏராளமானோர் உருவாகி வருகிறார்கள்.படித்து முடித்து தொழில்தொடங்குவதால் இவர்களால் பெரிய அலுவலகத்தைக் கட்டமைக்க போதிய நிதியில்லாமல் சிரமப்படுகிறார்கள்.

மேலும் அயல்நாடுகளுடன் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளத் தகவல் தொழில்நுட்பத்துறையில் கணினி, அகன்ற அலைவரிசையுடன் கூடிய தொலைத் தொடர்பு வசதி, தடையில்லா மின்சாரம் உள்ளிட்டவையும் தேவை. இவை அனைத்து ஏற்பாடுகளுடன் கூடிய அலுவலகங்கள் ஊழியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து கட்மைப்புகளுடன் குறைந்தபட்சம் 3பேர் அமர்ந்து பணிபுரியும் சிறிய அலுவலகம் முதல் அதிகபட்சம் 800 பேர் வரை பணிபுரியும் அலுவலகத்தை ஸ்மார்ட் ஒர்க்ஸ் இந்தியா வழங்குகிறது. குறைந்த பட்ச வாடகை ரூ.10 ஆயிரம் என்றும் சதுர அடி அடிப்படையில் வாடகை தீர்மானிக்கப்படும் என்றும் ஸ்மார்ட் ஒர்க்ஸ் நிர்வாகிகள் நீட்டிஷ் ஷர்தா, ஷர்ஷ் பினானி ஆகியோர் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஈக்காட்டுத்தாங்கலில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் எதிரில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Leave A Reply