ஹைதராபாத்,
திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி அருகே டி.என். கன்ரீகா என்ற இடத்தில் ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காளஹஸ்தி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply