வடஇந்தியாவில் பிரபலமாக உள்ள பொழுதுபோக்கு அலைவரிiயான கலர்ஸ் தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தடம்பதிக்கிறது.

கலர்ஸ் தமிழ் என்ற பெயரில் தனது ஒலிப்பரப்பை வரும் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது வயாகாம் 18 மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் குழும தலைமைசெயல் அலுவலர் சுதான்ஷூ வாட்ஸ், அதன் பிராந்திய பொழுதுபோக்குத்துறையின் தலைவர் ரவீஷ் குமார் மற்றும் கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தனர்.

பொழுதுபோக்குக்கான ஒரு-நிறுத்த அமைவிடமாக திகழவிருக்கும் இந்த சேனல், பல்வேறு பிரிவுகளில் தனித்துவமான சிறப்பான நிகழ்ச்சிகளின் அணிவரிசையின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஆர்வமூட்டும் கதைகளையும், நிகழ்ச்சிகளையும் வழங்கவிருப்பதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. தமிழ்நாட்டின் கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply